நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல் -இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.