நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நாளையும் தொடரவுள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

அதன் பின்னர், குறித்த தினத்திலிருந்து மறு அறிவிப்பு வரும் வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு வேளையில், முன்னர் போன்றே அனைவரும் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழுக்களாக வெளியில் செல்லுதல், குழுக்களாக இணைந்து செயற்படுதல், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை பகிர்தல் மற்றும் விற்பனை செய்தல் முதலான செயற்பாடுகள் ஊரடங்கு காலப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து, இன்றும் நாளையும் நாடு முழவதும் 900 தற்காலிக பொலிஸ் அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த காலப் பகுதியில் புலனாய்வு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வாகனங்களும் சோதனையிடப்படவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.