நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டமா? பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

0

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக சிலர் போலி பிரசாரங்கனை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

போலி பிரசாரங்களை முன்னெடுப்போரை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முன்னரும் போலி பிரசாரங்களில் ஈடுபட்டோர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றங்களின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமே போலி பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

பொதுமக்கள் அவற்றை நம்பவேண்டியதில்லை. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட பிரதான ஊடகங்களினூடாக அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.