நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு – அவதானம் மக்களே!

0

நாடளாவிய ரீதியில் நாளை (31) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜூன் 1 ஆம் திகதி  அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் முதல், ஜூன் 3 ஆம் திகதி வரை தினமும் 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன், ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில்  ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. 

ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை தினமும் 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரம் ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.