எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தனது சகோதரரான முத்தையா பிரபாகரனை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அவர் முதற்கட்ட நடவடிக்கையாக மலையகத்தில் மக்களுடனான சந்திப்புக்களையும், சமுக சேவைகளையும் நடத்தி வருகின்றார்.
இதன்போது, மலையக மக்கள் மீது கொண்ட அக்கறையினாலேயே தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியதென தெரிவித்துள்ள அவர், அதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முரளிதரனின் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் மலையகத்தில் தற்போது நிலைத்து நிற்கும் அரசியல்வாதிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.