நாடாளுமன்றில் தமிழ் எம்.பிக்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி

0

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவுற்றதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் அரச, எதிர்க்கட்சியினர் படையினருக்கு வாழ்த்துக்களையும், புகழாரங்களையும் சூட்டிய நிலையில் தமிழ் எம்.பிக்கள் யுத்தத்தில் நடந்த கொடூரங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை பத்து மணிக்கு கூடியது.

இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பணங்களை தொடர்ந்து யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவுற்றதை முன்னிட்டு சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விசேட உரையாற்றியிருந்தார்.

பிரதமரின் உரைக்கு பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுவதற்கு முயற்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான சுமந்திரன் எழுந்து நின்று 12 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாளை பிரதமர் நினைவுப்படுத்தியமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனினும் இந்த நாளில் உயிரிழந்த சிவில் மக்களையும் பிரதமர் நினைவுகூர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.