நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.