நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் பசில்!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே நிதி அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.