நாடு எங்கு செல்கிறது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் – GMOA

0

தற்போதைய கொரோனா தொற்றுடன் நாடு செல்ல வேண்டிய திசையை நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, தொற்று பரவுவதைத் தடுக்க ஜனாதிபதி உறுதியான முடிவுகளை எடுத்துள்ளார் என குறிப்பிட்டார்.

அதன்படி, முடிவுகள் நேற்று நாட்டின் தலைவரால் அறிவிக்கப்பட்டன என்றும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு இப்போது மக்களுக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான தனது முடிவை ஜனாதிபதி அறிவித்துள்ளார் எனவே மக்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஹரித அளுத்கே குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தமக்கான பொறுப்புணர்வுகளை மறந்து செயற்படுகின்றமையே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று டெஹ்ரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.