நாடு ஒருபோதும் முடக்கப்படாது – ஜனாதிபதி கோட்டாபய

0

கொரோனா வைரஸ் பரவலை நாட்டிற்குள் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் நாட்டை திறந்து வைப்பது கட்டாயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தீர்மானங்கள் எடுக்கும் போது முழுமையான செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஏன் கொரோனா தொற்றுவதில்லை? அவர்கள் உரிய முறையில் முகக் கவசம் அணிகின்றார்கள். சரியான முறையில் கைக் கழுவுகின்றார். சரியான முறைகளை பின்பற்றுகின்றார்கள். இதனை தான் நாங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.

இவற்றினை சரியான செய்தால் எந்தவொரு பிரச்சினையும் இன்றி நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். மக்கள் அவதானமாக இருந்தால் நாட்டை கொண்டு செல்ல முடியும்.

மாத சம்பளம் எடுப்பவர்களுக்கு நாட்டை மூடினால் பிரச்சினைகள் இல்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு 10 நாட்கள் நாட்டை மூடினால், அதன் நட்டத்தை ஈடு செய்வதற்கு சில நேரங்களில் ஒரு வருடமாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எங்களால் ஒரு பக்கத்தினை மாத்திரம் சிந்தித்து தீர்மானம் முடியாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.