நாடு திரும்பிய மேலும் 494 இலங்கையர்கள்

0

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 494 இலங்கையர்கள் நான்கு விமானங்களில் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 34 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 1.12 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று கட்டார் ஏயர்வேஸ் விமானத்தின் மூலம் 22 இலங்கையர்கள் டோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 1.21 மணியளவில் வந்தடைந்தனர்.

மேலும் ஓமானில் சிக்கித் தவித்த 150 இலங்கையர்களுடன் ஓமான் ஏயர்லைன்ஸ் விமானம், மஸ்கட்டிலிருந்து மத்தள விமான நிலையத்தை நேற்றிரவு 11.15 மணியளவில் வந்தடைந்தது.

அதேநேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 288 இலங்கையர்களுடன் இலங்கையர் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல் -226 என்ற விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.