நாடு முழுவதிலும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்!

0

நாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

அத்தோடு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் தொடர்பான புதிய நடைமுறையும் செயற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.