நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

0

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு ஆகிய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.