நாட்டின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும்

0

நாட்டின் சில பகுதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் இவ்வாறு தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.