நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானம்!

0

நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வாரம் முழுவதிலும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டமொன்றும் வகுக்கப்படவுள்ளது.

பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.