நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

0

நாட்டின் பல பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தெஹிவளையிலுள்ள மக்களுக்கு தெஹிவளை எம்.எம்.சி வளாகத்தில் இன்று முதல் தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை நகராட்சி மன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவுற்றதன் பின்னர், 30-60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இன்று நெதிமாலையில் வசிக்கும் மக்களுக்கும், நாளை சர்னங்கர வீதி, 28ஆம் திகதி கொஹுவலையில் வசிப்போருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதேநேரம், மார்ச் 2ஆம் திகதி பார்க் வீதி,  3ஆம் திகதி தெஹிவளை கிழக்கு, 5ஆம் திகதி கொஹுவலை கிழக்கு பகுதியில் வசிப்போருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.