கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.