நாட்டில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள்

0

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடுவதற்கு எந்தவொரு வகையிலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவம், அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் ஒரு தடவையில் 50 வீதமானோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.