நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் மற்றும் விரைவான அன்டிஜன் சோதனைகள் காரணமாகவே நாளாந்த கோவிட் தொற்றுக்கள் குறைந்துவிட்டன என்ற கூற்றை சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது.
பி.சி.ஆர் சோதனைகளை விட அன்டிஜன் சோதனைகளை நடத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
இருப்பினும், இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். மாறாக தாம் வேண்டுமென்றே பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பி.சி.ஆர் சோதனை திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் போது அதை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.