நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (செவ்வாய்கிழமை) 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட மினுவாங்கொடை கொத்தணி மற்றும் அலுவலக உறுப்பினர்கள் 37 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களோடு தொடர்புகளை பேணிய 143 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 06 பேர் வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர்.
நேற்று 17 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.