நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம்

0

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மழையினால், நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்த அவதானம் மக்களிடையே குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 19 ஆயிரத்து 446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.