நாட்டில் நாளை முதல் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன எரிவாயு சிலிண்டர்கள்!

0

3 நிபந்தனைகளின் அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தபட்டன.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டும்.

இருப்பினும் தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.