நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

0

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்றாலும், நீண்ட கால பாதிப்புகளை தவிர்ப்பதற்காக நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நீண்டகாலமாக மூடி வைத்தால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.