நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்!

0

நாட்டில் நேற்றும்(வியாழக்கிழமை) இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

இதற்கமைய நாட்டில் நேற்று 2 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1  இலட்சத்து  35 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 643 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 301 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 121 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 61 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 31 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 174 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 91 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 42 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 100 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.