நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

0

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மைக்காலத்தில் நாட்டின் தனியார்துறை சந்தைகளில்கூட தைரொட்சின், புற்றுநோய் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்றதொரு நெருக்கடிநிலை முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை.

அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.  அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதற்குரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதியதொரு மென்பொருளின் உதவியுடன் மருந்துப்பொருட்களின் கையிருப்பு தொடர்பான தகவல்கள் உரியவாறு பேணப்பட்டன. “ எனக் குறிப்பிட்டுள்ளார்.