நாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் பொலனறுவையில் உள்ள சேனபுர புனர்வாழ்வு மையத்தில் இருந்த கைதிகள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று 14 பேர் குணமடைந்திருந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் தற்போது 263 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு 64 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.