நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன

0

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 14 பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த மூவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.