நாட்டில் வெகு விரைவில் பஞ்ச நிலை உருவாகும் – சமன் ரத்னபிரிய

0

அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த குறுகிய காலப்பகுதியில் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இந்நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாட்டில் வெகு விரைவில் பஞ்ச நிலை உருவாகுமென அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவறான முறையில் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொருட்களின் விலையை தீர்மானிக்கும் பலம் இந்த அரசாங்கத்துக்கு இல்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.