நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

0

நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.