நாட்டை முடக்கும் அளவுக்கு திரிபடைந்த கோவிட் – 19 வைரஸ் பரவவில்லை! சுகாதார அதிகாரிகள்

0

தற்போது பிரித்தானியாவில் பரவி வரும் கோவிட் -19 வைரஸின் மிகவும் பரவக்கூடிய மாறுபாடு இலங்கையில் அடையாளம் காணப்பட்டாலும், அதன் தாக்கம் மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷா டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய திரிபு நாட்டைப் முடக்கவோ அல்லது எந்த பிராந்தியத்தை முடக்கும் அளவிற்கோ பரவவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே பிரித்தானியாவில் பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபு சைப்ரஸ், ஜோர்டான் மற்றும் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.