நாட்டை முடக்குவது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு – சுகாதார அதிகாரியின் தகவல்

0

கோவிட் தொற்று தீவிரம் காரணமாக நாடு ஆபத்தான நிலையில் இருப்பதால் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் சுகாதார அமைச்சர் நேரடியாக கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கு ஜனாதிபதி இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் சுகாதார அதிகாரி ஒருவர் தமிழ் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக முக்கிய அமைச்சர் ஒருவர் குறித்த பத்திரிகைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சுகாதாரத்துறையின் முடிவுகளுக்கு அமையவே இவை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.