நாட்டை முடக்குவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

0

நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பான இறுதித் தீர்மானங்களை சுகாதார துறையினரே எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் நாட்டு நிலைமைகளை பொறுத்தே இந்த தீர்மானங்கள் அமையும் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.