நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய அவசியமில்லை – புதிய சுகாதார பணிப்பாளர்

0

நாட்டை முடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என புதிய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் நிலவும் கொரோனா பரவலுக்கு மத்தியில் நாட்டை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பயண கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவல் மேலும் ஏற்படுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசத்தை மாத்திரம் தனிமைப்படுத்துவது போதுமானதென அவர் கூறியுள்ளார்.