நாணயத்தாள்களை அவதானமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

0

நாணயத்தாள்களை அவதானமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஏடிம்களையும் பயன்படுத்வோர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.