நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், களுத்துறை, மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும், மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட மற்றும் கொடபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்,

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரி அனர்த்தம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் புரலுதல், நிலம் நிலம் தாழிறங்கல் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.