நான்கு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

0

விரைவாக பரவி வரும் கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த குறைந்தது நான்கு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பது மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது ஆகியன சுகாதார கட்டமைப்பால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்திற்கு வந்துள்ளது.

இதனால், இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தினமும் சுமார் 300 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் மரணங்களின் எண்ணிக்கையும் 100 அண்மித்து வருகிறது.

கடந்த 13 நாட்களில் மாத்திரம் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது.

இதனிடையே பல வைத்தியசாலைகளில் பிணவறைகளும் கோவிட் தொற்றால் மரணிக்கும் நபர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதுடன் வைத்தியசாலைகளின் கோவிட் விடுதிகளிலும் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.

இந்த நிலைமையில், வைத்தியசாலைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவுக்கும் மேல் நோயாளிகள் நிறைந்துள்ளனர்.

இதனால், நோய் தொற்றை குறைக்க துரிதமான நடவடிகைகளுக்கு செல்ல வேண்டியது அத்தியவசியமானது எனவும் சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.