நாமல் – கருணா கூறிய கல்முனை தமிழ் பிரதேச செயலம் எங்கே – சாள்ஸ்

0

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருவதாக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கல்முனைக்கு வருதை தந்த நாமல் ராஜபக்ச தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருவதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இன்று அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் தற்போது ஆட்சியில் தான் உள்ளார்.

பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருவதாக கூறி வாக்கு சேகரித்த விநாயகமூர்த்தி முரளிதரனும் தற்போது பிரதமரின் இணைப்பாளராக இருக்கின்றார்.

இவ்வாறு ஆட்சியிலிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் மௌனம் காக்கின்றமை வெட்கக்கேடான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.