நாய், பூனை இறைச்சிகளை உண்ண சீனர்களுக்கு தடை

0

சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி வகைகளை உண்ணுவதற்கு அந்நாட்டின் ஷெண்ட்ஜென் மாகாணம் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் தோற்றம் பெற்று உலகளாவிய ரீதியில் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தியுள்ளமையினை தொடர்ந்து, குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிலரை பரிசோதனைக்கு உட்படுத்தியமைக்கு அமைய அவர்கள் வௌவ்வால், பாம்பு உள்ளிட்ட மேலும் சில காட்டு மிருகங்களை விற்பனை செய்யும் பிரதான சந்தைப்பகுதியுடன் தொடர்பில் இருந்தமை தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து குறித்த வைரஸானது காட்டு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் ஐயம் வெளியிட்டுள்ளனர்.