நாளையும் ஏழரை மணித்தியால மின்வெட்டு!

0

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.