கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள், நாளை முதல் (11) வழமைக்கு திரும்பவுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை வழங்கியுள்ள வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன பிரதானிகள் சேவைக்கு அமரத்த வேண்டிய பணியாளர்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளவேண்டுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் அநாவசியமாக வீதியில் நடமாடுவதற்கும், வேறு இடங்களில் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகள் தொழில் நிமித்தம் பயணிப்போருக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக வருகைதருவோரை விடுத்து ஏனையோர் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை இலக்க விதிமுறையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை (11) அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.