நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு?

0

நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம் அரசங்க, வங்கி விடுமுறையாகும். அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த வார இறுதியில் ஊரடங்கை எவ்வாறு நடைமுப்படுத்துவது என்பது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வார இறுதியில் எவ்வாறு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.