நாளை நள்ளிரவுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு – மஹிந்த தேசப்பிரிய

0

நாளை நள்ளிரவுக்கு முன்னர் தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த தேசிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வாக்கெண்ணும் பணியை உடனடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நாளை காலை 7 அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 66 மையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்குள் பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் முடித்து வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவதில் நம்பிக்கை இருப்பதாகவும் மஹிந்த தேசபிரியா மேலும் தெரிவித்தார்.