நாளை முதல் அதிவேக வீதிகள் திறப்பு

0

அதிவேக வீதிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளன.

தெற்கு அதிவேக வீதியின் வௌியேறும் பகுதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகள் திறக்கப்பட்ட தினத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

கட்டணங்களை அறவிடும் பிரிவுகள் உள்ளிட்டவைகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு முதல்நாளில் கடமைக்கு சமூகமளிப்பதில் சிக்கல் தோன்றியுள்ளதால், சில சந்தர்ப்பங்களில் 3 அதிவேக நெடுஞ்சாலைகளும் திறக்கப்படுவதில் சிரமங்கள் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் சேவைகளை வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்துள்ளார்.