நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள்

0

புதிய அரசியல் கட்சிகளப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் (24) வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆகும்.

அவற்றுள் சட்ட சிக்கல்களை கொண்ட சுமார் 6 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மாத்திரம் செயலற்ற அரசியல் கட்சிகளாக கருதப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 03 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்தது.