நாளை முதல் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது

0

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.