நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு!

0

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிகள், தச்சர்கள், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்கள், பூக்கடைக்காரர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடுத்த வாரத்தில் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோர் தொடர்பான புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 19 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.