நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அதனை நிராகரித்ததாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்காமல் இருக்க தான் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினமானது எனவும் இவ்வாறான சூழலில் பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் சீர்குலைந்து, நாடாளுமன்றம் இந்த யதார்த்தத்தைப் புரிய வைத்தாலும், இந்த யதார்த்தத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.