நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் – முக்கிய தகவல் வெளியானது…….

0

நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளது.

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதனை தவிர, குழுவின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக மேலதிகமாக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி ஹரிகுப்த ரோஹணதீர (Harigupta Rohanadeera) தெரிவித்துள்ளார்.

மக்கள் இது குறித்த யோசனைகள், கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி, கொழும்பு – 1 எனும் முகவரிக்கும் அனுப்ப முடியும்.
அத்துடன் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான மின்னஞ்சல் முகவரியொன்றையும் தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து யோசைனைகள், முறைப்பாடுகளையும் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி Harigupta Rohanadeera குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மத்திய வங்கியில் நாளை (22) நடைபெறவுள்ள தமது குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.