நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – றிசாட்

0

நிபந்தனைகள் இன்றி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியமான தலைவரை சந்தித்த பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய இடமளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையை அடுத்தே பதியூதீன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.