நியூஸிலந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

0

நியூஸிலந்தில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பசிஃபிக் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெர்மடெக் (Kermadec) தீவுகள் அருகே அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.

நியூஸிலந்தின் அவசரப் பிரிவு அதிகாரிகள், வடக்குத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் வசிப்போரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கரையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், ரஷ்யா, மெக்சிக்கோ, தென் அமெரிக்கக் கரையோரப் பகுதிகள் வரை சிறிய அலைகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.